ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்திருந்த சங்கீத் பிரதாப் மற்றும் ரோமாஞ்சம் என்கிற ஹாரர் காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த அர்ஜூன் அசோகன் ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கொச்சியில் உள்ள எம்ஜி ரோடு என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கார் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது..
இதில் எதிர்பாராத விதமாக இந்த நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் சங்கீத் பிரதாப் தற்போது தான் நலமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பதிவு மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் முந்தைய நாள் இரவு விபத்தை சந்தித்தாலும் நல்ல வேலையாக அனைவருமே தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் 24 மணி நேரம் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் இது குறித்து தகவலை வெளியே யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனக்கு சிறிய காயம் தான்.. ஆனால் தற்போது நலமாக இருக்கிறேன். இன்று வீடு திரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன். மேலும் கார் ஓட்டுநர் மீது நான் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.