லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு...
1. முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும்.
2. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த படங்களுக்கு செல்ல வேண்டும்.
3. நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும்.
4. இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி இருக்கிறது. இதை மாற்ற புதிய விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. ஆகவே வருகிற 16.08.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பட உள்ளது.
5. தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30ம் தேதிக்குள் முடிக்க கேட்டுக் கொள்கிறோம்.
6. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதை மறு சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால் வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்துவிதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படுகிறது.
7. இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளடக்கிய (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது.