ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இரண்டாம் பாகங்கள் பற்றிய செய்திகள், தகவல்கள், அப்டேட்ஸ்கள்தான் கடந்த ஒரு வாரத்தில் பரபரப்பாக உள்ளது. ஜூலை 12ல் வெளிவந்த 'இந்தியன் 2' பற்றிய காரசாரமான விவாதங்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, அடுத்தடுத்து சில இரண்டாம் பாகப் படங்களின் அப்டேட்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் ஆரம்பமாகி உள்ளது. இப்படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளார்கள். கடந்த சில வருடங்களில் குணச்சித்திரம், வில்லன் என சில முக்கிய படங்களில் தவறாமல் இடம்பெறுபவராக சூர்யா உள்ளார். இப்போது 'சர்தார் 2'விலும் இணைந்துவிட்டார்.
அடுத்து 'விடுதலை 2' படத்தின் முதல் பார்வை பற்றிய அறிவிப்பையும் சற்று முன் வெளியிட்டுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை நாளை (ஜுலை 17ம் தேதி) வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இன்னும் 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என சமீபத்தில் சில செய்திகள் வெளியானது. அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இந்த முதல் பார்வை அப்டேட் வெளியாகி உள்ளது.