வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் உலக இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக வருகிற 27ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தற்போது ரஹ்மான் மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், "மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தியன் 2' புரமோசன் பணிகளுக்காக மலேசியா சென்ற கமல்ஹாசன், மலேசிய பிரதமரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.