பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் குரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் 'கிளாடியேட்டர்'. 2000மாவது ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 'கிளாடியேட்டர்' படத்தின் இரண்டாம் தயாராகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட்டே இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தில் ரோம பேரரசர் மார்க்கஸ் ஆரேலியஸின் (வாக்கின் பீனிக்ஸ்) பேரனாக வந்த சிறுவன் லூசியஸ் (பால் மெஸ்கல்), ரோம் நாட்டிலிருந்து தன்னுடைய தாயால் தொலைதூர நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு வாழ்ந்து வருகிறார். ஆனால் சூழல் அவரை மீண்டும் ரோமுக்கு ஒரு கிளாடியேட்டராக கொண்டு வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது இரண்டாம் பாகத்தின் கதை.
பவுல் மெஸ்கல், பெட்ரோ பாஸ்கல், ஜோசப் குயின், பிரட் ஹெயட்சினர், உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.