வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இயக்குனர் கே.பாலச்சந்தரின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பாலச்சந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். இவ்விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா “ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவுக்கு பாலச்சந்தரின் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி. அந்த தீவில் அவரது முழு உருவ சிலையை வைக்க வேண்டும்” என்றார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் அவரைப் (பாலச்சந்தர்) பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று(நேற்று) அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள் எனக் கூறியுள்ளார்.