நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தாரகை சினிமா சார்பில் பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‛அறம் செய்'. ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் பாலு எஸ்.வைத்தியநாதன் கூறும்போது, “இது அரசியல் படம் தான். ஆனால் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஏனென்றால் இந்த படத்தில் நடித்த எல்லோருக்கும் அடுத்த வாழ்க்கை இருக்கிறது. ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள்.
நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை. 74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம்” என்றார்.