300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கோட் படத்தை ஹெச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் விஜய். இப்படம் விஜய் ரசிகர்கள் விரும்பும் வகையில் கமர்சியல் கதையில் உருவாகிறது என்று சொல்லிக் கொண்டாலும், இந்த படம் விஜய்யின் எதிர்கால அரசியலை சொல்லக்கூடிய ஒரு புரட்சிகரமான கதையில் உருவாகி வருவதாகவே தனது கோலிவுட் நண்பர்கள் வட்டாரத்தில் கூறி வருகிறார் வினோத். விஜய்யின் எதிர்கால அரசியலை சொல்லும் இந்த படத்தில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணாமல் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளதாம். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதோடு அவரது கடைசி படம் என்பதால் அவர் செய்யப்போகும் எதிர்கால அரசியலை இந்த படத்தில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே கமர்சியல் விஷயங்களை கலந்த புரட்சிகரமான ஒரு அரசியல் கதையில் இந்த படம் உருவாகிறதாம்.