எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது: எல்லா துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.
நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல; அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள்; அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனையடுத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.