சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் சித்தார்த்துடன் காதல் வசப்பட்டு சமீபத்தில் தான் தாங்கள் திருமணம் செய்யப் போகிறோம் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற நடிகை சோனாக்சி சின்ஹாவின் திருமண வரவேற்பில் சித்தார்த்துடன் கலந்து கொண்டார் அதிதி ராவ். இதைத்தொடர்ந்து லண்டனுக்கு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான பயணம் மேற்கொண்டார் அதிதி ராவ்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கியதும் தனது லக்கேஜை எடுப்பதற்காக சென்றுள்ளார் அதிதி ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்தும் கூட அவரது லக்கேஜ் வந்த பாடில்லை. இதனை தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வாடிக்கையாளர் மையத்தை ஆன்லைனில் தொடர்பு கொண்ட போது எங்களுக்கும் நீங்கள் வந்த விமானத்தின் லக்கேஜ்களை ஏற்றி இறக்கும் பணியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிம்பிளாக கூறிவிட்டனர்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில், தான் விமான நிலையத்தில் காத்திருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு, “பிரிட்டிஷ் ஏர்வேஸ் எனக்கு பதில் சொல்லாமல் அழகாக கைகழுவி விட்டது” என்று கூறியுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து நேற்று (ஜூன்-26) மதியம் இந்த பதிவை அவர் வெளியிட்டதால் அதன்பிறகு எப்போது தனது உடைமைகளை சேகரித்துக் கொண்டு சென்றார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.