‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
தமிழில் சூர்யாவை வைத்து தான் இயக்கிய சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சர்பிரா என்ற பெயரில் இயக்கி உள்ளார் சுதா கெங்கரா. இப்படம் ஜூலை பன்னிரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டு வந்தார் சுதா. ஆனால் படத்தில் ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் இருப்பதால் சில திருத்தங்களை சூர்யா சொன்னார். ஆனால் சுதா மறுக்கவே இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை சூர்யாவிற்கு பிடித்து போனதால் உடனே அவருக்கு கால்சீட் கொடுத்து அப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா. அதனால் துருவ் விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் சுதா. தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் டைசன் படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தை முடித்ததும் நவம்பர் மாதம் முதல் சுதா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.