வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட திரையுலகின் பிரபல மறைந்த மூத்த நடிகர் ராஜகுமாரின் பேரனும், சமீபத்தில் வெளியான யுவா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவருமான நடிகர் யுவ ராஜ்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் படம் வெளியான நிலையிலேயே இப்படி கதாநாயகியுடன் இணைத்து பேசப்பட்டதும் தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் விண்ணப்பித்ததும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக அவரது மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தானும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் நன்றாக சென்று கொண்டிருந்த தங்களது குடும்ப வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசியதாகவும் அதற்கு காரணம் யுவா படத்தில் யுவ ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை சப்தமி கவுடாவுடன் தனது கணவருக்கு ஏற்பட்ட நெருக்கம் தான் காரணம் என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் இந்த சப்தமி கவுடா.
இந்த நிலையில் யுவராஜ் குமாரின் மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தேவையில்லாமல் அவர்களது விவகாரத்து விஷயத்தில் தனது பெயரை இழுத்துள்ளதாகவும் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகவே அவர் இதை செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை சப்தமி கவுடா.
யுவா படத்தில் யுவராஜ் குமாருடன் இணைந்து நடித்ததை தவிர தனக்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத நிலையில் இப்படி தன் மீது அபாண்டமாக பொதுவெளியில் ஸ்ரீதேவி பைரப்பா குற்றம் சுமத்தியுள்ளார் என்று கூறி இதற்காக அவர் தனக்கு பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மேலும் தன்னைப் பற்றி இப்படி அவதூறாக பேசியதற்கு பொது வெளியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பைரப்பாவுக்கு நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.