'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு |
சூப்பர் ஹிட் அடித்து வந்த தொடர் எதிர்நீச்சல். எதிர்பாராத வகையில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மரணமடைய, வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவரது நடிப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்ததால் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய வேல ராமமூர்த்தி, 'டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தான் இப்போது நினைக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப்பெரிய அவமானமாகவே நான் இதை பார்க்கிறேன்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.