மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் பஹத் பாசில். அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களது சம்பளம் சில கோடிகள் மட்டும்தான். மிகக் குறைந்த செலவில்தான் அங்கு படங்களைத் தயாரிப்பாளர்கள்.
மலையாளத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும் மற்ற மொழிகளில் நடிக்கும் போது அதைவிட அதிக சம்பளம் வாங்குவது அவர்களது வழக்கம். பஹத் பாசில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு நாளைக்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கில் நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இப்படித்தான் நாள் கணக்கு அடிப்படையில் சம்பளம் வாங்குவார்கள். அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களுக்குத் தருவார்கள். தமிழில் தற்போது யோகி பாபு தான் இப்படி சம்பளம் வாங்கி வருகிறார்.