பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதான 'கிராண்ட் ப்ரி' விருதை 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற மலையாள படம் வென்றது. இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். கனு குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விருதுகளுடன் நாடு திரும்பிய படக்குழுவினரை முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து கவுரவித்தார். இதை ஒரு விழாவாக நடத்த முடிவு செய்திருந்தார்கள். ஆனால் குவைத்தில் தீ விபத்தில் மலையாளிகள் உயிரிழந்து இருப்பதால் கொண்டாட்டத்தை தவிர்த்து அனது அலுவகத்தில் அவர்களை கவுரவப்படுத்தினார் பினராயி விஜயன். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.