விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். நடிப்பில் நல்ல திறமை கொண்ட இவர், அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி விழா மேடையில் ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தவே, அவரும் உற்சாக மிகுதியால் சில மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் இப்படி பொதுவெளியில் மோசமாக வார்த்தைகளை பேசியதற்காக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு இது போன்ற விஷயங்கள் புதிதல்ல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளரிடம் இதேபோன்று அநாகரிகமான வார்த்தைகளை ஸ்ரீநாத் பாஷி பேசியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதனாலேயே அவருக்கு மலையாள திரையுலகில் ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு நிலைமை சீரியசாக சென்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.