மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தனது காதலியான பவித்ரா கவுடாவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவரை கூலிப்படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கொலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.