திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் |
பிரேமம் படம் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீப காலமாக பரபரப்பான கருத்துக்களை சோசியல் மீடியாவில் கூறுவதை வாடிக்கையாக வைத்திருந்த இவர் விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் மரணம் குறித்து கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவரே சுய விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை இத்தனை மாதங்கள் கழித்து தாமதமாக இப்போதுதான் பார்த்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். தாமதமாக பார்த்ததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அல்போன்ஸ் புத்ரன் படத்தின் இயக்குனர் சிதம்பரத்திற்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு ஆஸ்கர் விருது மீதான நம்பிக்கையே போய்விடும். அந்த அளவிற்கு படம் ஏ டு இசட் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அதேசமயம் இந்த கதையின் மாந்தர்கள் அனுபவித்த வேதனை நிஜத்தில் யாருக்கும் வரவே கூடாது” என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.