துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஹீரோக்கள் டெட்புலும், வால்வரினும். இப்போது இந்த இரண்டு சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து வெளிவரும் படம் 'டெட்புல் அண்ட் வால்வரின்'. ஷவன் லே இயக்கி உள்ள இந்த படத்தில் ரெயான் ரெனால்ட்ஸ் டெட் பூலாகவும், ஹக் ஜாக்மேன் வால்வெரினாகவும் நடித்துள்ளனர். வருகிற 26ம் படம் வெளிவருகிறது.
படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. படம் தமிழிலும் வெளியாவதால் தமிழிலும் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே தனித்தனியாக வெளிவந்த வால்வெரின் படங்களும், டெட்புல் படங்களும் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இரண்டும் இணைந்து வெளிவருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி உள்ளது. இரண்டு சூப்பர் ஹீரோக்களும் முதலில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும், பின்னர் ஒரு பொது எதிரிக்காக ஒன்று சேர்வது மாதிரியான திரைக்கதையில் படம் தயராகி உள்ளது.