டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் 'கல்கி 2898 ஏடி'. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அவருக்கு உதவும் நண்பன் கதாபாத்திரத்தில் புஜ்ஜி என்கிற கார் ஒன்றும் படத்தில் முக்கிய இடம் பெறுகிறது. சமீபத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குழந்தை ரசிகர்களை படத்திற்கு வரவழைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புஜ்ஜி கார் மூலமாக படத்தை புரமோட் செய்யும் வேலைகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா, ராம் சரணின் மகள் கிலின் காரா ஆகியோருக்கு இந்த புஜ்ஜி கார் கிப்ட் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறிய அளவிலான புஜ்ஜி கார் பொம்மை மற்றும் ஸ்டிக்கர்கள் என குழந்தைகளை கவரும் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் இருவருக்கும் இந்த புஜ்ஜி கார் கிப்ட் வீடு தேடி வந்துள்ளது. இது குறித்து தகவலை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தியுள்ள நயன்தாரா கல்கி படக்குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




