ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
1991ம் ஆண்டு மிஸ் கல்கத்தா அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் ரச்சனா பானர்ஜி. அதன் பிறகு விளம்பரப் படங்களில் நடித்து சினிமாவில் நடிக்க வந்தார். பல பெங்காலிப் படங்கள், ஒடியா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் 1996ம் ஆண்டு வெளிவந்த 'பூவசரன், டாடா பிர்லா', 1997ல் வெளிவந்த 'வாய்மையே வெல்லும்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த வருடத் துவக்கத்தில்தான் ரச்சனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு ஹுக்லி பார்லிமென்ட் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜியை 76,853 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ரச்சனாவுக்கு 7,02,744 ஓட்டுகள் கிடைத்துள்ளன. 2019ல் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி ஆக இருந்தவர் லாக்கெட். அவரும் ஒரு முன்னாள் நடிகை.