டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தன் மகனையே சுட்டுக்கொன்ற எஸ்.பி.சவுத்ரி தான் இன்றைக்கு வருகிற போலீஸ் கேரக்டருக்கெல்லாம் முன்னோடி. போலீஸ் படங்களை பட்டியலிட்டால் இன்றைக்கும் முதலில் இருக்கும் படம் தங்கப்பதக்கம். 1974-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், சோ, மனோரமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் கதையை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். தங்கப்பதக்கம் உருவான கதை தனியானது. சோவின் 'துக்ளக்' பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகேந்திரன். நிறைய பத்திரிகை படிக்கும் வழக்கம் கொண்ட மகேந்திரன் அதற்காகவே அங்கு வேலை செய்தார். ஒரு நாள் ஒரு ஆங்கில படத்தின் விளம்பரத்தை பார்த்தார். அதில் ஒரு போலீஸ் அதிகாரி தன் மகனை சுடுவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. அப்போது அவர் மனதில் 'தங்கப்பதக்கம்' படத்தின் ஒன்லைன் உருவானது.
ஒரு நாள் சோவிடம் நாடகத்திற்காக ஒரு கதை கேட்பதற்காக துக்ளக் அலுவலுத்திற்கு நடிகர் செந்தாமரை வந்தார். அப்போது சோ அலுவலத்தில் இல்லாததால் அங்கிருந்த மகேந்திரனிடம் இதை சொல்லி உள்ளார். அப்போது மகேந்திரன் தன்னிடம் இருந்த 'தங்கப்பதக்கம்' ஒன் லைனை கூறியுள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு பெரிய குற்றங்களை செய்யும் மகன். இருவருக்குமான சட்ட போராட்டமும், பாச போராட்டமும்தான் ஒன்லைன் என்றார்.
இது அவருக்கு பிடித்துக்போகவே மகேந்திரனுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்து அந்த ஒன் லைனுக்கு திரைக்கதை எழுத வைத்தனர். பின்னர் அந்த கதையை நாடகமாக்கி எஸ்.பி.சவுத்ரியாக செந்தாமரை நடித்து வந்தார். இந்த நாடகத்தை பார்த்த சிவாஜி அதை திரைப்படமாக்கி எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் நடித்தார். காலத்தால் அழியாத காவியமாக அது உருவானது.
1974ம் ஆண்டு இதே ஜூன் 1ம் தேதி வெளியான தங்கப்பதக்கத்திற்கு இது பொன்விழா ஆண்டு.




