நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர். இவரது இரு மகன்களில் மூத்தவர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். இளையவர் பிரேம்ஜி அமரன் நடிகர், இசையமைப்பாளராக உள்ளார். ‛‛சென்னை 28 - 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் இவர் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்.
45 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமலே இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. சேலத்தை சேர்ந்த மணிமாறன் - ஷர்மிளா தம்பதியரின் மகள் இந்துவை திருமணம் செய்ய இருக்கிறார். வருகிற ஜூன் 9ம் தேதி, திருத்தணி முருகன் கோயிலில் இவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான திருமண பத்திரிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. இது காதல் திருமணம் என்கிறார்கள்.
எப்படியோ பேச்சிலர் வாழ்க்கைக்கு ‛பை பை' சொல்லியிருக்கிறார் பிரேம்ஜி அமரன்.