நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா நடித்த படம் 'பூவே உனக்காக'. இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. விஜய் கேரியரில் இந்த படம் மைல் கல்லாக அமைந்தது. இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் நடித்துள்ள 'ஹிட் லிஸ்ட்' படம் நாளை வெளிவருகிறது. இந்த நிலையில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும், இதுகுறித்து அப்பாவிடம்(விக்ரமன்) பேசி இருப்பதாகவும் விஜய் கனிஷ்கா கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “நடிப்பு பயிற்சி, நடனம், சண்டைகள் கற்று 'ஹிட் லிஸ்ட்' படம் மூலம் நாயகனாகி உள்ளேன். உணர்வுப்பூர்வமான அதிரடி படமாக இருக்கும். எனது நடிப்பை ரஜினி, கமல், விஜய், சூர்யா ஆகியோர் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. 'பூவே உனக்காக' ரீமேக்கில் நடிக்க விருப்பம் உள்ளது. இதை எனது தந்தையிடம் தெரிவித்து விட்டேன். அந்த படத்தை எனது தந்தை இயக்குவாரா? அல்லது வேறு டைரக்டர் இயக்குவாரா? என்பது விரைவில் தெரிய வரும். 'பூவே உனக்காக' இரண்டாம் பாகம் எடுத்தாலும் நடிப்பேன்'' என்றார்.
இதுகுறித்து விக்ரமன் கூறும்போது, “பூவே உனக்காக ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்கிற மகனின் ஆசை நியாமானதுதான். ஆனால் அதற்கான காலம், நேரம் கனிந்து வரவேண்டும், குறிப்பாக தற்போது வெளியாக உள்ள 'ஹிட் லிஸ்ட்' படத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும்” என்றார்.