ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோ. அஞ்சலி, நேஹா ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா அஞ்சலி, நேகா ஷெட்டி இருவரையும் போட்டோவுக்கு சரியாக நிற்கும்படி கூறி அவரே அவர்களை நிற்க வைத்தார். அஞ்சலி அதனை கவனிக்காமல் தனது சேலையை சரிசெய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாலகிருஷ்ணா அஞ்சலியின் தோளை பிடித்து தள்ளினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பொது மேடைகளில் இந்த மாதிரி நடந்து கொள்வது என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படியே செய்திருக்கிறார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது சும்மா விளையாட்டுக்கு செய்தது என்று பாலகிருஷ்ணா தரப்பு கூறி வருகிறது.