ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமைகளுக்கான வியாபாரம் ஆரம்பமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு மிக அதிக விலையை சொல்கிறதாம். ஆனால், வினியோகஸ்தர்கள் அவ்வளவு விலையைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அதேசமயம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அட்வான்ஸ் தொகையாகத் தருகிறோம். ஆனால், அதை என்ஆர்ஏ அடிப்படையில் தர மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
புஷ்பா முதல் பாகத்திலேயே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினார்களாம். இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.