மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி. அவர் கதாநாயகியாக நடிக்கும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்குப் படம் இந்த வாரம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடித்துள்ள இப்டத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் அஞ்சலி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “கேம் சேஞ்சர்' படம் பற்றி நிறைய பேச ஆசை. ஆனால், நடிகர்கள் யாரும் அப்படத்தைப் பற்றி பேச அனுமதியில்லை. எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அது ஷங்கர் சார் மூலம்தான் வரும். இல்லையென்றால் தயாரிப்பாளர் தில் ராஜூ சார் சொல்வார். இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்,” என பதிலளித்தார்.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.