வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவான கேன்ஸ் திரைப்பட விழா தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்திய படங்கள் பல போட்டியிடுகிறது, மற்றும் சிறப்பு திரையிடலில் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் குறும்பட போட்டியில் முதல் மற்றும் 3வது பரிசை இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படங்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.
மைசூரை சேர்ந்த சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கத்தில் உருவான 'சன்பிளவர்' என்ற குறும்படம் முதல் பரிசை பெற்றுள்ளது. 16 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை புனேவை சேர்ந்த திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்து இருந்தனர். திருட்டுப்போன சேவலை மையமாக வைத்து உருவாகி இருந்தது.
இதேபோல மீரட்டை சேர்ந்த மான்சி மகேஸ்வரி என்ற மாணவி இயக்கிய 'பன்னி ஹூட்' என்ற குறும்படம் மூன்றாம் பரிசை பெற்றது. கிராமிய கலைஞரான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.