ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக இசை ஆதிக்கம் செலுத்திய டி.எம்.சவுந்தர்ராஜன். அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். “சிவாஜி நடிப்பில் பெயர் பெற்றதற்கும், எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதற்கும் நான் பாடிய பாடல்கள்தான் காரணம்” என்று டி.எம்.சவுந்தராஜனே சொல்லியிருக்கிறார்.
டி.எம்.எஸ், எம்ஜிஆருக்கு பாடினால் அவர் பாடுவது போன்று இருக்கும், சிவாஜிக்கு பாடினால் அவர் பாடுவது போன்றே இருக்கும். இருவருக்கும் தனித்தனியாக குரலில் பாடுகிறார் என்று ரொம்ப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை டி.எம்.எஸ் மறுத்தார்.
மதுரையில் நடந்த ஒரு இசை விழாவில் இதுகுறித்து பேசும்போது, “நான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக பேசப்படுவதில் உண்மையில்லை. இருவருக்கும் ஒரே குரலில்தான் பாடுகிறேன். அவர்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் அந்த பாடல் வருகிறது என்பதை உள்வாங்கி பாடுவதால் அந்த கேரக்டர் பாடுவது போன்று இருக்கும், அதாவது எம்ஜிஆர், சிவாஜி பாடுவது போன்று இருக்கும்” என்றார்.
இன்று அவரது 11வது நினைவுநாள்.