எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்ட படம் 'கல்கி 2898ஏடி'. நாக் அஸ்வின் இயக்குகிறார், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோனே, திஷா பதானி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மகாபாரத காலத்தில் ஆரம்பித்து 2898ம் ஆண்டில் முடிவடைகிற மாதிரி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 600 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனால் தற்போது புரமோசன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படத்தில் வரும் 'புஜ்ஜி' என்ற கேரக்டர் அறிமுக விழா நடந்தது. புஜ்ஜி என்பது படத்தில் பிரபாஸ் பயன்படுத்தும் அதிநவீன கார் மற்றும் ரோபோ. இதற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சுவரை உடைத்துக் கொண்டு பிரபாஸ் 'புஜ்ஜி' காரில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
பின்னர் அவர் பேசும்போது "இப்படத்தின் மூலம் சினிமாவின் மிகப்பெரிய லெஜெண்டுகளான கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. கமல் சார் படத்தில் பயன்படுத்திய உடைகள் மாதிரியே எனக்கும் உடைகள் வாங்கித் தர வேண்டும் என்று என் பெற்றோரிடம் அடம் பிடித்துக் கேட்டிருக்கிறேன். இப்போது அவருடனே நடித்திருக்கிறேன். இந்தியாவே பெருமைப்படும் நடிகர் அமிதாப் பச்சன் சார். அவருடன் நடித்தத் தருணங்களை என் வாழ்வின் பெருமையான தருணங்களாக என்றென்றும் என் மனதில் வைத்துக் கொள்வேன்" என்றார்.