தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
இந்தியாவை சேர்ந்த பல திரைக்கலைஞர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் வசிப்பதற்கான சிறப்பு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. ஏற்கனவே பல இந்திய பிரபலங்கள் இந்த விசாவை பெற்றுள்ளனர். இப்போது நடிகர் ரஜினிகாந்த் கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.
அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த விசாவை ரஜினிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரஜினி.
அதில் ‛‛யுஏஇ அரசால் வழங்கப்பட்ட கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுள்ளேன். இதற்காக அந்நாட்டு அரசுக்கும், லுலு சேர்மன் யூசப் அலிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்றி இது நடந்திருக்காது'' என தெரிவித்துள்ளார்.