சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்த பாலுமகேந்திராவின் 85வது பிறந்த நாள் இன்று. அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது படைப்புகள் இப்போதும் பேசப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழ் குடும்பத்தில் பிறந்த பாலுமகேந்திரா இந்தியா வந்து சினிமா மீதுள்ள ஆசையால் புனே திரைப்படக் கல்லுரியில் ஒளிப்பதிவு படித்தார். படிக்கும் காலத்தில் சர்வதேச படங்களையும், இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா கற்றுக் கொண்டார். ஒளிப்பதிவு படித்தாலும் இயக்குனராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.
படித்து முடித்து விட்டு 1972ம் ஆண்டு 'பனிமுடக்கு' எனும் மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார். இயக்குநராவதற்கு முன் மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இயற்கையான ஒளியில் முதன்முறையாக ஒளிப்பதிவு செய்து அதன் மூலம் புகழ்பெற்றார்.
1977ம் ஆண்டு முதன் முறையாக 'கோகிலா' என்ற கன்னட படத்தை இயக்கினார். இதில் கமல்ஹாசன் கதையின் நாயகன், ஷோபா கதையின் நாயகி, இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தார் மோகன். பிற்காலத்தில் கமல் போன்றே இருக்கிறார் என்று பல தயாரிப்பாளர்கள் கமல் கால்ஷீட் கிடைக்காமல் மோகனை வைத்து படம் எடுத்ததும், மோகன் நடித்து இளையராஜா இசை அமைத்த அத்தனை படங்களும் வெள்ளி விழா கொண்டாடியதும் அதற்கு பின் நடந்த வரலாறு. என்றாலும் கமலும், மோகனும் இணைந்து நடித்த படம் என்ற வகையில் கோகிலா முக்கியத்துவம் பெறுகிறது.
'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமான பாலுமகேந்திரா அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களை இயக்கினார்.