சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று ‛இந்தியன்'. 1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, கஸ்தூரி, சுகன்யா உள்ளிட்டோர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி, தற்போது ‛இந்தியன்-2' படத்தை முடித்துள்ளது. ‛இந்தியன்-3' படத்தின் படப்பிடிப்பையும் ஒன்றாக முடித்துள்ளனர். இதில், கமல்ஹாசனுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். இதில் 2வது பாகம் ஜூன் மாதமும், 3ம் பாகம் அடுத்த ஆண்டும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அனிருத் இசையமைத்து உள்ள இந்தியன்-2 படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவை ஜூன் மாதத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் பாடலை வரும் மே 22ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படம் ஜூலை 12ல் உலகம் முழுதும் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.