முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் சீசன். ஏற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களை மறு வெளியீடு செய்து கல்லா கட்டி வருகின்றனர். சமீபத்தில் விஜய்யின் ‛கில்லி' படம் மறு வெளியீடு செய்யப்பட்டு 25 நாட்களை கடந்து ஓடியதுடன் சுமார் ரூ.30 கோடி வசூலை குவித்தது. புதிய படங்கள் செய்யாத வசூலை இந்தப்படம் செய்தது.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‛படையப்பா' படம் மீண்டும் ரிலீஸாக உள்ளது. 1999ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛படையப்பா'.
ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் அதிரடி வெற்றி பெற்றன. இந்த படத்தை சத்ய நாராயணா, விட்டல் பிரசாத் உள்ளிட்டோர் உடன் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பனும் இணைந்து தயாரித்து இருந்தார்.
இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்வது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசி உள்ளார் தேனப்பன். சமீபத்தில் கோகுலம் ஸ்டுடியோவில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்தார் தேனப்பன். இருவரும் சினிமா தொடர்பாக பல விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது படையப்பா ரீ-ரிலீஸ் பற்றியும் தேனப்பன் பேசினார். ரஜினியும் மகிழ்ச்சியாக தாரளமாக செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
‛‛26 ஆண்டுகளுக்கு பின் ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சி. பாசத்திலும், நட்பிலும், மரியாதையிலும் துளியும் அவர் குறையவில்லை, அப்படியே தான் இருக்கிறார்'' என்கிறார் தேனப்பன்.
விரைவில் படையப்பா படத்தின் ரீ-ரிலீஸ் தேதி உடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.