ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வந்தார் அஜித். இந்த படம் முடியும் முன்பே அவரின் அடுத்த படமான ‛குட் பேட் அக்லி' பட அறிவிப்பு வந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. விடாமுயற்சி படம் பாதியில் நிற்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்க துவங்கி உள்ளார் அஜித்.
குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் முதல்பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் ஒரே காஸ்டியுமில் மூன்று பேராக இருக்கிறார். கைகள் முழுக்க டாட்டூ, பிரேஸ்லட், மோதிரம் என ஜொலிக்கிறார் அஜித், அவரின் ஆடையும் டிரெண்ட்டாக உள்ளது. மேலும் அவரின் தோற்றமும் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் ஸ்டைலாக உள்ளது.
இந்த போஸ்டரை வெளியிட்டு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என குறிப்பிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்தாண்டு பொங்கல் வெளியீடு என மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.