ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் திகங்கனா சூரியவன்ஷி. தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் 2019ம் ஆண்டு 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்தார். தற்போது 'சிவம் பஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார் , அப்சர் இயக்குகிறார். அஸ்வின் பாபு, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ஹைப்பர் ஆதி, சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் நடிக்கின்றனர்.
விகாஸ் பாடிசா இசை அமைக்கிறார் தசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். லவ் ஆக்ஷன் படமாக உருவாகிறது.