ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை(மே 10) ரிலீஸாகும் படம் ‛ஸ்டார்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளன. இளைஞன் ஒருவன் சினிமாவில் ஹீரோவாக துடிப்பதும், அதற்கான போராட்டமும் தான் கதைக்களம். இந்த படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இளன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த படத்தை எனது தந்தைக்கு (ஸ்டில்ஸ் பாண்டியன்) சமர்பிக்கிறேன். ஸ்டார் படம் பார்த்த பின் அதில் உள்ள மூன்று சர்ப்ரைஸை மட்டும் தயவு செய்து வெளியே சொல்லாதீர்கள். என்னுள் இருக்கும் கலைஞன் ஒவ்வொருவரும் தாங்களாக அனுபவித்து இந்த படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறான்'' என குறிப்பிட்டு தனது தந்தையுடன் இருக்கும் பழைய போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
இளனின் தந்தை ஸ்டில்ஸ் பாண்டியன் ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.