லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மறைந்த நடிகர் குமரிமுத்து முன்பு அளித்த ஒரு பேட்டியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛சில கற்றார் பேச்சும் இனிமையே...' என பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த பேட்டியில், நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் குமரிமுத்து.
அதில், இந்தப் பாடலில் யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் படித்தவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, பெரிய சூரியனின் ஒளியில் இருந்து ஒரு சிறு குடை காப்பது போல் என்று அந்த பாடலின் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக இப்போது இந்த பதிவை போட்டு உள்ளார். இதன் மூலம் யாருக்காவது அவர் பதில் கொடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.