9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோக்களாக மாறியவர்கள் வெகு சிலர் தான். சிவகார்த்திகேயன், சந்தானத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கவின் அந்த இடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். கடந்த வருடம் வெளியான டாடா படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய தேடி வருகின்றன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டார் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கவின். இந்த படம் வரும் மே பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்சன் தயாரிப்பில் தான் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு செய்தி சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருந்தது. இது பற்றி சமீபத்தில் மனம் திறந்துள்ள கவின், “ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். அவரை நான் நேரில் சென்று சந்தித்தேன். நாம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக விஜய் அண்ணாவை விட இன்னும் எளிமையாக இருக்கிறார் சஞ்சய். அதேசமயம் நான் சென்றதும், தற்போது நான் பணியாற்றி வரும் படங்கள் மற்றும் அவற்றிற்காக கொடுத்துள்ள கால்ஷீட் குறித்து அவர்களிடம் விளக்கமாக சொல்லிவிட்டு தற்போதைய சூழலில் அவரது படத்தின் நடிக்க முடியாது என்பதை விளக்குவதற்காகவே அங்கே சென்றேன்” என்று கூறியுள்ளார்.