இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

மலையாளம், தமிழ் மட்டுமல்லாத சமீப வருடங்களாக தெலுங்கிலும் புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்டவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவரது மகள் மாளவிகா.. திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்த இவருக்கு பாலக்காட்டைச் சேர்ந்த இவரது காதலர் நவநீத் கிரிஷ் என்பவருடன் நேற்று குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கொச்சியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மோகன்லால், திலீப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இன்னொரு பக்கம் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஏற்கனவே மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்கிற பெண்ணை காதலித்து வருகிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்துவிட்டது. விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொண்ட தனது காதலியை அழைத்து வந்து இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மோகன்லாலிடம் அறிமுகப்படுத்தி வாழ்த்து பெற்றார் காளிதாஸ் ஜெயராம்.