மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகின்றார். 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளார். இதனால் தனது அடுத்த படமான 69வது படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் 69வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. முதலில் இப்படத்தை தெலுங்கு நிறுவனமான டிவிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த படத்தை விட்டு அந்த நிறுவனம் விலகியது.
சமீபகாலமாக விஜய் 69வது படத்தை தயாரிக்க செவன் ஸ்கிரீன், பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்சிக்' படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் விஜய்யின் 69வது படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.