கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை ஜோதிகா ஹிந்தியில் நடித்துள்ள படம் 'ஸ்ரீகாந்த்'. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை தழுவி தயாராகி உள்ள இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். துஷார் ஹிர நந்தானி இயக்கி உள்ளார்.
இந்த படத்தை புரொமோஷன்செய்ய சென்னை வந்த ஜோதிகா கூறுகையில், ‛‛பாலிவுட்டில் எனது மூன்றாவது படம் ஸ்ரீகாந்த். இந்த படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமானது. இந்த படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு மொழி தடையில்லை. இதில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.
சமூக கருத்துக்கள் பேசும் ஜோதிகா தேர்தலில் ஓட்டளிக்காதது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டளிக்கிறோம் என சொல்ல... அங்கிருந்தவர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை என கூற... ஆமாம் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டு போடுறோம். சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூரில் இருக்க வேண்டி உள்ளது. அது எங்களின் தனிப்பட்ட உரிமை, அதற்கு மதிப்பளிக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து விஜய்யின் அரசியல் பற்றி கேள்வி எழ, ‛இந்த நிகழ்வுக்கு அப்பாற்பட்ட கேள்வி வேண்டாம்' என பதில் கூற மறுத்துவிட்டார்.
அரசியலுக்கு வரும் ஆசை இருக்கா என்ற கேள்விக்கு, ‛என்னை யாரும் அரசியலுக்கு அழைக்கவில்லை' என்றவர், ‛பின்னர் குழந்தைகளை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. அதனால் அரசியல் ஆசை இல்லை' என்றார்.