கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அதிதி ராவ். அதேப்போல் நடிகர் சித்தார்த்தும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்ததாக தகவல் பரவியது. பின்னர் அது திருமண நிச்சயதார்த்தம் என பொதுவெளியில் அதிதி அறிவித்தார்.
எளிய முறையில் நடந்த இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி அதிதி கூறுகையில், ‛‛எங்கள் குடும்பத்தில் முக்கிய நிகழ்வு நடந்தால் எங்களின் 400 ஆண்டுகால பழமையான கோயிலுக்கு சென்று வழிபடுவோம். நிச்சயதார்த்திற்காக அங்கு சென்றோம். எனது திருமணம் பற்றி நிறைய வதந்திகள் அந்த சமயம் வந்ததால் என் அம்மாவுக்கு பலரும் போன் செய்து அதுபற்றி விசாரித்துக் கொண்டே இருந்தனர். இதை தெளிவுப்படுத்தும்படி என் அம்மா கூறினார். அதன்பின்னரே வலைதளத்தில் எங்களின் திருமண நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை போட்டோ உடன் பகிர்ந்தேன்'' என்றார் அதிதி.