பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி உடன் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது.
தக் லைப் படத்திற்கு ஏற்கனவே ஒரு அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் கமல் பற்றிய அறிமுக காட்சிகள் இருந்தன. இப்போது மற்றொரு புதிய வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தவாரத்திற்குள் அல்லது அடுத்தவாரம் துவக்கத்தில் இந்த வீடியோ வெளியாகும் என்கிறார்கள். இதில் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட அறிமுக வீடியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




