‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001ம் ஆண்டில் வெளிவந்த முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியான அந்தப் படம் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய் நடித்து ரீ-ரிலீஸ் ஆன 'கில்லி' படம் பத்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்திற்கான தியேட்டர் கொண்டாட்டங்கள் பலவும் வீடியோக்களாக வெளிவந்தன.
அவற்றை மிஞ்சும் விதத்தில் இன்று சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. காலை காட்சியின் போது தியேட்டருக்குள்ளேயே அஜித் ரசிகர்கள் பட்டாசைக் கொளுத்திப் போட்டனர். திடீரென வெடிக்கப்பட்ட பட்டாசால் ரசிகர்கள் சிதறி ஓடினர்.
கொண்டாட்டம் என்ற பெயரில் விபரீதத்தை உணராமல் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அத்தனை பேர் கூடியுள்ள தியேட்டருக்குள் பட்டாசை எடுத்து வருவதை எப்படி தடுக்காமல் விட்டனர் என்பது தெரியவில்லை.




