'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கடந்த 2001ல் முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'தீனா'. அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு 'தல' என்கிற பட்டம் பிரபலமானது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து மீண்டும் தீனா படம் ரீ மாஸ்டர் டிஜிட்டல் பதிப்பில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இதே தேதியில் அஜித்தின் பில்லா, மங்காத்தா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.