ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'பியார் பிரேமா காதல்' படத்திற்குப் பிறகு இளன் இயக்கி வரும் படம் 'ஸ்டார்'. யுவன்ஷங்கர் ராஜா இசையில் கவின், ஆதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது. மே மாதம் 10ம் தேதி இப்படம் வெளியாகிறது.
பொதுவாக ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்ற பின்தான் அப்படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளரோ, படத்தின் கதாநாயகனோ கார் பரிசளிப்பார்கள். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் பென்டலா சாகர் இயக்குனர் இளனுக்கு வித்தியாசமாக வீட்டு மனை ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் இளன், “ஸ்டார்' படத்தைப் பார்ப்பதற்கு முன்பாகவே, என்னுடைய தயாரிப்பாளர் பென்டலா சாகர் ஐதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனையைப் பரிசாக அளித்துள்ளதற்கு பெரும் நன்றி. என் மீதான நம்பிக்கைக்கும் அன்புக்கும் நன்றி சார். இன்னும் இணைந்து பணிபுரிய வேண்டும்.
குறிப்பு - படத்தைப் பார்க்க அவரை அழைத்த போது, அதற்கு முன்பாக எனக்குப் பரிசளிக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
எங்களது நட்பின் ஆரம்பத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்க சிறிது நேரம் ஒதுக்க விரும்பினேன். உங்கள் அரவணைப்பு, கருணை, வெளிப்படைத் தன்மை எனக்கு நிறைய புரிய வைத்துள்ளன. மேலும், இந்தப் பயணம் எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் இப்படி அற்புதமாக இணைந்ததற்கு நன்றி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.