அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஹனுமான்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஓடிடியில் படம் வெளியான பிறகும் தியேட்டர்களில் வரவேற்பு குறையவில்லை. தற்போது படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. 92 வருட தெலுங்குத் திரையுலக வரலாற்றில் சங்கராந்தியில் வெளிவந்த படங்களில் 'ஆல் டைம் பிளாக்பஸ்டர்' வெற்றியை இந்தப் படம் பெற்றுள்ளது.
அது குறித்து படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா, “நன்றி நிறைந்த இதயங்களுடன்… நீங்கள் அனைவரும் இதை சாத்தியம் ஆக்கியுள்ளீர்கள் என்பதை இப்போதும் நினைவில் கொள்கிறேன். 'ஹனுமான்' என் வாழ்நாளின் இனிப்பான நினைவுகளில் இருப்பார். உங்கள் பக்கத்து வீட்டு சூப்பர் ஹீரோ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, “இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் எனது இதயம் மிகுந்த நன்றியுணர்வுடன் நிறைந்துள்ளது. 'ஹனமான்' 100 நாட்களைத் திரையரங்குகளில் கொண்டாடுவது நான் வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் தருணம். சமீப வருடங்களில் 100 நாட்களுக்கு படங்கள் ஓடுவது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் 'ஹனுமான்' படத்தை 100 நாட்கள் என்ற மைல்கல்லை வழங்கிய அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி. எப்போதும் அமோக ஆதரவளிக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது ஒட்டு மொத்த குழுவிற்கும் மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.