3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வரும் வரிசையில் சமீபத்தில் நடிகர் விஜய்யும் இணைந்து தனது அரசியல் கட்சியின் பெயரையும் அறிவித்துவிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தையும் அதன் பிறகு இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தும் விட்டார். அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற யூகங்கள் பலவாறாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் நடிகர் விஷாலும் வரும் 2026ல் தானும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் விஜய் அரசியலில் இறங்கியதால் தான் நீங்களும் அரசியலில் இறங்குகிறீர்களா என்று அவரிடம் சமீபத்தில் ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால், “அப்படி இல்லை.. விஜய்யை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்கு வர இருப்பதால் என்னுடைய கனவு நிறைவேறாமல் போகிறதே என்கிற வருத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.