புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம், புஷ்பா, மாமன்னன், மலையாளத்தில் பாச்சாவும் அற்புத விளக்கும் என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த ஆவேசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஐந்தே நாட்களில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதே சமயம் கடந்த வருடம் அவர் கன்னட இயக்குனரான பவண்குமார் என்பவர் இயக்கத்தில் தூமம் என்கிற படத்தில் நடித்தார் பஹத் பாசில். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியை தழுவியது. இது குறித்த காரணத்தை தற்போது கூறியுள்ளார் பஹத் பாசில்
“அந்த படம் புகை பிடித்தலுக்கு எதிரான ஒரு செய்தியை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு புகையிலை கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். இன்றைய இளைஞர்கள் புகை பிடிக்கும் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என என் கதாபாத்திரம் மூலமாக அதில் வலியுறுத்தப்பட்டது. அதே சமயம் நான் புகைபிடிப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் புகை பிடிக்கக் கூடாது என அட்வைஸ் செய்வதை ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சில படங்களை எடுப்பதற்கு முன் கதையாக பார்க்கும் போது மிகப் பிரமிப்பாக இருக்கும். படமாக எடுத்தே ஆக வேண்டும் என தோன்றும். ஆனால் படமாக எடுக்கும்போது நாம் எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தூமம் அப்படி ஒரு படம் தான்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.
இவர் இந்த படத்தில் நடித்த போதே இது அவர் ஏற்கனவே தமிழில் நடித்த வேலைக்காரன் படத்தின் சாயலில் தான் உருவாகிறது என்று சொல்லப்பட்டதும், அந்த படத்திற்கு கிடைத்த அதே ரிசல்ட் தான் இதற்கும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.